Friday, August 5, 2011

என் கவிதை நாயகி!!!

என் விரல் புரட்டிய
பக்கங்களும்,
இமையசையா வாசித்த
எழுத்துக்களும்
அவளைப் பற்றியே!

எந்த மையில்
எழுதினாலும்
அவள் கருப்பு சரித்திரமே - என்
எழுத்துக்களாய் பிரசவிக்கின்றன!

கடலை எழுதினாலும்,
திடலை எழுதினாலும்,
இயற்கையை எழுதினாலும்,
இம்சையை எழுதினாலும்
முடியும் இடம்
அவளை நோக்கியே!

என் பக்கங்கள் எல்லாம்
எனைக் கேட்டன
எங்களுக்கு வேறு
உடுப்பே இல்லையா? என்று.
உடை இழந்து
நிர்வாணமாகிப்போன அவள்
இழந்த கலை
மீட்கும் நாள்
உனக்கு விடுதலை என்றேன்.

எழிலாய் இருந்தவள்
இன்று இல்லாது போயிருந்தாள்
என் கவிதையின்
கருப்பொருளாய் இருந்தவள்
கடைசியில்
காணாமல் போயிருந்தாள்
அவள் ஈழத் தாய்!!!

இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இணைக்கவும்



2 comments:

  1. தங்களின் கவிதைகள் விரைவில் வண்ணம் கொள்ளும்..

    நம்புவோம்...
    நாளை என்பது மாறக்கூடியதே...

    ReplyDelete
  2. நன்றி செளந்தர்,மாறவில்லை எனில் நாம் கூடி மாற்றுவோம்.

    ReplyDelete