Thursday, September 8, 2011

ஏலம் போன விலைமகளின் ஈன ஓலம்!

நீண்ட நெடிய
என் வாழ்க்கையில்
நிறைய நடந்துவிட்டது.
வரம் வாங்கிய
வனப்பும் பொழிவும்
சாபக்கேடாய் போய்விட்டது!

கொடுத்துப் பெறுவதோ
எடுத்துக் கொடுப்பதோ
-
தாம்பத்திய காமம்!
கொடுத்த சுகத்திற்கு
வலியே கூலி
-
விலைமகள் சாபம்!

கண்டோர் எல்லாம் என்னை
விண்டு தின்றனர்
நாளும் ஒரு ஆளை
உடுத்துவதாய் பரிகாசம்
கொண்டனர்!
சுகமும் கண்டாள்
சொத்தும் கொண்டாள்
வார்த்தையில் கொண்றனர்!

உடலை வருத்தி உழைப்பு
உடலை கொடுத்து பிழைப்பு
யாருக்குத் தெரியும்
நான் இரண்டாமவள் என்று !?

செத்த உடலுக்கு
சித்திரவதை என்ன
சிங்காரம் என்ன,
மரத்துப் போனவளுக்கு
விலையாய்
பொன் வைத்தாள் என்ன
பொருள் வைத்தாள் என்ன,

நித்தம் தன்னை
மெத்தையாக்குகிறவள்
முள்ளில்தான் படுக்கிறாள்
என்பதை
யார்தான் அறிவார் !!!

இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் வலையில் இணைக்கவும்



7 comments:

  1. /////
    கொடுத்த சுகத்திற்கு
    வலியே கூலி
    - விலைமகள் சாபம்!
    //////////

    சாட்டையடி வரிகள்..

    ReplyDelete
  2. //////
    நித்தம் தன்னை
    மெத்தையாக்குகிறவள்
    முள்ளில்தான் படுக்கிறாள்
    என்பதை
    யார்தான் அறிவார்
    /////////

    உண்மைதான்
    அது யாராலும் அறியப்படாத நரகம்...

    சென்று திரும்புகிறவனுக்கு தெரியாது
    அங்கு கிடைத்த சுகத்தின் தரம்...

    ReplyDelete
  3. கருத்துக்களுக்கு நன்றி நண்பா!!!

    ReplyDelete
  4. முதல் வருகை..

    //கொடுத்துப் பெறுவதோ
    எடுத்துக் கொடுப்பதோ
    - தாம்பத்திய காமம்!
    கொடுத்த சுகத்திற்கு
    வலியே கூலி
    - விலைமகள் சாபம்! //

    அருமையான வரிகள் நண்பரே..

    தொடரட்டும் நம் நட்பு

    நட்புடன்
    சம்பத்குமார்

    ReplyDelete
  5. வருகைக்கும் கருத்திற்கும் எனது நன்றிகள்!

    ReplyDelete
  6. நல்ல கருப்பொருள். விலைமகளின் ஆதங்கம் அருமையாய் வெளிப்பெற்றிருக்கிறது இந்த கவிதையில்.பதிவுக்கு நன்றி.

    ReplyDelete
  7. கருத்துக்களுக்கு நன்றி!!!தொடர்வோம் இன்று போல் என்றும்.

    ReplyDelete